செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பாரிவேந்தர் பிறந்த நாளை
முன்னிட்டு போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பாபுராயன்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் எஸ் ஆர் எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு பசுமை மாறத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்துஅரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மூன்று வயது முதல் 10 வயது வரை 6 கிலோ மீட்டர் தூரம் 11 வயது மேற்பட்டோருக்கான 11 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் முதல் 10 இடம் பிடித்த மாணவர்களுக்கு கோல்ட் மெடல் மற்றும் தல பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி டீன் ஜவஹர் மற்றும் பேராசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது.