கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வி.சி.எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் மாணவர்களுக்காக ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் செல்வி சுகுணா வழிகாட்டுதல் படி நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் ஹெரால்டு ஷாம்,செயலர் கில் போர்டு ஹெரால்டு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுவயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மாணவர்களிடம் உருவாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, கைகளை சுத்தமாக கழுவும் பழக்கத்தை கடைப்பிடிப்பது போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டை குறைத்து, வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவின்ஒரு பகுதியாக, வண்ணமயமான வேடமிட்டு மழலையர், ஆரோக்கியம் தொடர்பான காட்சிப்பொருட்கள், பாடல்கள் மற்றும் மகிழ்ச்சியான கலந்துரையாடல்கள் என உற்சாகமாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *