திருவாரூர், ஜூலை 23, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகம்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.இதனை முன்னிட்டு, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தைலம்மை திரையரங்கின் முன்பு அதிகாலை முதலே ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் பெருந்திரளாகக் கூடினர். திரையரங்க வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள், பிரம்மாண்ட விளம்பரப் பதாகைகள் மற்றும் தோரணங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது.திரைப்படம் வெளியாவதை ஒட்டி, ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த டிஜே இசைக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர். இதனால் திருவாரூர் நகரப் பகுதியே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *