பொ மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி சாலையில் 8ஆவது வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து இப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர் சில மாதமாக இந்த தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிக்கக்கூடிய இரண்டு குழாய்களும் பழுதடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டே இருந்தது இதனால் இந்த பகுதி குடியிருப்பு வாசிகள் தண்ணீர் வீணாக கூடாது என்பதற்காக மரக்கட்டையை அந்த குழாயில் செருகி வைத்திருந்தனர் தேவைப்படும் பொழுது மரக்கட்டையை எடுத்து தண்ணீர் பிடித்து வந்தனர், தற்போது அந்த மரக்கட்டை எடுக்க முடியாதபடி முற்றிலும் உள்ளே செருகி விட்டதால் மக்கள் வேறு வழியின்றி தொட்டிக்கு மேல் பகுதியில் பச்சை குழாய் விட்டு அதன் மூலம் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெற்று வந்தனர்,

பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்து தரம் நிறைந்த தண்ணீர் பிடிக்கும் குழாய்களை பொருத்தித் தருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொன்டனர்மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் பழனி உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் நடவடிக்கை எடுக்குமா…? பொ.மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம் என்று டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தியை வெளியிட்டு இருந்தது இந்த நிலையில் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக சின்டெக்ஸ் மினி டேங்கில் பிட்டிங் புதிதாக மாற்றப்பட்டுள்ளது இதற்கு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *