மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்.

தென்காசி ஜூலை 20

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் மக்கள் மன்றத்தின் 8வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வே. ஜெயபாலன் அவர்கள் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைக்கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இருவரும் காமராஜர் அவர்களின் கல்விப் புரட்சி, மக்கள் நலத் திட்டங்கள், எளிமை, நேர்மை மற்றும் பொதுச் சேவைகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

மேலும், விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நன்கொடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் பெருந்தலைவர் மக்கள் மன்றத்தின் சார்பில் வே. ஜெயபாலன் அவர்களுக்கும், டாக்டர் கலைக்கதிரவன் அவர்களுக்கும் நினைவுப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுரண்டை நகரச் செயலாளர் ஏ.ஜி. கணேசன் அவர்கள், பெருந்தலைவர் மக்கள் மன்ற நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.