இதன் ஒரு பகுதியாக, 26.06.2026 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஆறாம் நாள் உற்சவத்தில், இரவு பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், மாட வீதிகளில் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

இந்த நிகழ்வில் வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். வேத மந்திரங்கள், திவ்ய பிரபந்த பாராயணங்கள் மற்றும் பக்தி முழக்கங்களுடன் நடைபெற்ற யானை வாகன சேவை, பக்தர்களை பரவசமடையச் செய்தது.

பிரம்மோற்சவத்தின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.