கல்பாக்கம் ஜுன் 14
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி (இ. ஆ.பெ), மாவட்ட சுகாதார பணிகள் மரு. செந்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பேபி மற்றும் பரணி, பபிதா ஆகியோரின் அறிவுத்தலின்படி, ரியல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் லாரன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேம்பட்ட களப்பணிக்கான இலவச மருத்துவ முகாம் கடந்த 12ம் தேதி காட்டாங்குளத்தூர் ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார் ,

துணை தலைவர் சாந்தகுமாரி நந்திவரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் உமா மகேஸ்வரி,கயல் மற்றும் கற்பக விநாயக மருத்துமனை மருத்துவர்கள் சரண்யா,வர்ஷா, தருண்,கவிதா,ராதிகா, சுப்புராம் மற்றும் சாமுவேல் ஆராரோ டேவிட்,சுமித்ரா , காசநோய் பிரிவு ஹரிஹரன், அண்ணாமலை ரியல் அறக்கட்டளை திட்ட மேலாளர் மணிகண்டன், களப்பணியாளர் மலர்விழி ஆகியோர் பங்கேற்றனர்,இந்த முகாமில் கண் பரிசோதனை,தோல் நோய் சிகிக்சை, பொது மருத்துவம்,எச். ஐ. வி,பால்வினை தொற்று,மஞ்சள் காமாலை,கல்லீரல் அழற்சி முதலான சிகிக்சை அளிக்கப்பட்டது.150 க்கும் மேற்பட்ட இலக்கு மக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *