சென்னை வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி கொளத்தூர் மூகாம்பிகை நகர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சென்னை வடமேற்கு மாவட்ட கழக செயலாளர் MTC. என்.தனிகா தலைமையில் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி ஆர். ஜெய்சங்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சியை
தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கியது.

இதில் பெண்கள் அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத் துண்டினை அணிவித்து தவெக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது மாவட்ட, பகுதி வட்டக் கழக தவெக நிர்வாகிகள் உட்பட பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *