குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம், லியோ சங்கம், மற்றும் பாண்டிச்சேரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைவும்
இணைந்து ராதாகிருஷ்ணன் ,கௌசல்யா ஆகியோரின் நினைவாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாமை கும்பகோணம் கார்னேஷன் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.

குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம் தலைவர் PMJF லயன் ரஜினி பாய் தலைமை தாங்கினார். லயன் PDG டாக்டர் வீரபாண்டியன்,Rtn பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். புற்றுநோய் பேருந்துத் திட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn கணேசன், வட்டார தலைவர் PMJF லயன் சுபா சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் குடந்தை மகாசக்திஅறக்கட்டளை தலைவர் PMJF லயன் மீனா செல்வம், பொருளாளர் MJF லயன் கலைச்செல்வி சாமிநாதன் மற்றும் குடந்தை மகா சக்தி சங்க உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *