செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் சமுதாய நலக்கூடத்தில் மஹாகணபதி டிரஸ்ட் சார்பில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.

சிகிச்சை முகாமை நிறுவனர் சோமசுந்தரம் குருநாதர் துவக்கிவைத்த இந்நிகழ்வில்
லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் மணிவண்ணன், பாடியநல்லூர் லயன்ஸ் சங்க நிர்வாகி கா.ஷண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி, எக்கோ, கண் பரிசோதனை, மற்றும் பொது மருத்துவம் ஆகிய நோய்களுக்கு, சிறந்த மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை,
பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், ரெட்ஹில்ஸ் கிங் லயன்ஸ் சங்கம், மாஸ் குடியிருப்போர் பொது நலச் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *