கோவை,கோவையில் இன்று ‘மனிதநேய ஜனநாயக நீதி கட்சி’யின் அறிமுக விழா நடைபெற்றது.சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கட்சியின் அறிமுக விழா, கோவையில் நடைபெற்றது.

இந்த விழாவில், ஈத்கா பள்ளிவாசல் தலைவர் ஜே.அப்துல் கபூர் மற்றும் ஜனநாயக வெற்றி கழக நிறுவனத் தலைவர் ஓயிட் பாஷா ஆகியோர் கட்சியை துவக்கி வைத்தனர். மனிதநேய ஜனநாயக நீதி கட்சியின் நிறுவனரும் தலைவருமான கோவை இல்முதீன் மற்றும் பொதுச்செயலாளர் . நூர் முகமது ஆகியோர் இந்த அறிமுக விழாவிற்குத் தலைமை தாங்கி கட்சி கொடியை அறிமுகம் செய்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மாநிலச் செயலாளர்
ரமேஷ் , முன்னாள் மாமன்ற உறுப்பினர் காஜா கான் , தமிழக வெற்றிக்கழக மாவட்ட முதன்மை செயற்குழு உறுப்பினர்ஆதி இப்ராஹிம் ,உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *