துறையூரில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் மே-17
திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட காப்பாளர் ப. ஆல்பர்ட்முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், நீட்தேர்வை ரத்து செய்வதற்கான காரணங்களைப் பற்றி விரிவாக தலைமைக் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கணேசன், தீண்டாமை முன்னணி பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிவானந்தம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் விஏஓ.செல்வம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் விசுவை.ரவி,திராவிடர்கழக மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ், மாவட்ட ப. க. துணை தலைவர் எஸ். என். புதூர். கருணாகரன், உப்பிலியபுரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மாராடி எம். ஏ. ரமேஷ், துறையூர் நகர தலைவர் க. ராஜா, துறையூர் நகர இளைஞரணி லோகு, மாணவரணி ம. இனியன்சம்பத், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் இரா. நந்தகுமார், ஹவுசிங் போர்டு எம். ஆர். சந்திர போஸ், துறையூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தந்தை செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இறுதியில் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *