சென்னை திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் மணலி சின்னசேக்காடு பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

அவருடன் நடிகர் ரவி மோகன் கவுன்சிலர்கள் டாக்டர். கே.கார்த்திக், முல்லை ராஜ சேகரன், பகுதி செயலாளர் சாரதி, பார்த்திபன், பகுதி துணை தலைவர் ஜோசப் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்,