திண்டுக்கல், செல்லமந்தாடி, சோதனைசாவடியில்
தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர்.
அப்போது அந்த சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3,01,210 பணத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கார்த்தி என்பவரின் யுனிவர்சல் டிஸ்ட்ரிபியூட்டர் என்ற நிறுவனத்தின் வாகனம் என்றும், மேலாளர் கண்ணன் என்பவர் பணத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிக்கந்தர் சுல்தான் உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (கணக்கு) அவரிடம் காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
