கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாஜக அமைப்பாளர்கள் நியமனம்: எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் MLA நியமித்துள்ளார்.

அதனடிப்படையில் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட பாஜக தலைவர் V.V.செந்தில்நாதன்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் காவேரி A.மோகன்ராஜ்,கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் R.V.S செல்வராஜ்,அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட துணை தலைவர் விக்டோரியா வேலுச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தேர்தல் பணியாற்ற தொகுதிக்கு இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இருவரை நியமித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.