தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமராஜபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இங்குள்ள காமராஜபுரம் சமுதாய கூடத்தில் போடிநாயக்கனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி கிராம ஊராட்சி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.ஜயப்பன் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் பங்கேற்று பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனடி தீர்வாக புதிய வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காமராஜபுரம் ஊராட்சி செயலாளர் கருப்பையா அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்